வேகமாக உடல் குறைக்க உதவும் 10 ஜூஸ் வகைகள்
வேகமாக உடல் குறைக்க உதவும் 10 ஜூஸ் வகைகள் ...
உடல் எடை குறைப்பதற்கு ஜூஸ் அருந்துவது புதிய வழக்கம் அல்ல. பல வருடங்களாக மக்கள் மத்தியில் வழக்கமான ஒன்றுதான். முழுவதுமாக நீராகாரங்களாக மட்டுமில்லாமல் அன்றாட உணவுடன் குறிப்பிட்ட சில ஃப்ரெஷ் ஜூஸ் சேர்த்துக்கொள்வது சீக்கிரம் உடல் எடை குறைக்க உதவும். ஃப்ரெஷ் ஜூஸ் குடிப்பதனால் பல விதமான வைட்டமின், மினரல்கள், ஃபைபர் கிடைக்கப்பெற்று அதிக கலோரிகளை கரைக்கலாம். உடல் எடை குறைப்பது மட்டுமில்லாமல் மேலும் பல சுகாதார நலன்களும் ஃபிரெஷ் ஜுஸில் கிடைக்கின்றன.
1.கேரட் ஜூஸ்:
கேரட்டில் குறைவான அளவில் கலோரிகள் மற்றும் அதிகமாக நார்ச்சத்து இருப்பதனால் எடை குறைப்புக்கு உகந்தது. ஒரு முழு கிளாஸ் கேரட் ஜூஸ் மதிய உணவு வரை போதுமானது. கேரட்டை பச்சையாக உண்பது சிறந்தது. மேலும் கேரட் ஜூஸ் பித்த சுரப்பை அதிகரிக்கும், இது அதிக கலோரிகளை கரைக்கச் செய்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவுகிறது. கேரட் ஜூஸுடன் ஒரு ஆப்பிள், பாதி ஆரஞ்சு மற்றும் கொஞ்சம் இஞ்சி சேர்த்து பயன்படுத்தலாம்.
2. பாகற்காய் ஜூஸ்
பாகற்காயில் ஜூஸ் செய்வது சுவையாக இல்லையென்றாலும் உடல் எடை குறைப்பதற்கு அது உண்மையில் உதவுகிறது. பாகற்காய் ஜூஸ் பருகுவது கல்லீரலில் இருந்து பித்த அமிலங்களை சுரந்து கொழுப்பை குறைக்க உதவுகிறது. பாகற்காயில் கலோரி குறைவாகவே உள்ளது. 100 கிராம் பாகற்காயில் வெறும் 17 கலோரிகள் மட்டுமே உள்ளது.
3. வெள்ளரிக்காய் ஜூஸ்:
அதிக நீர்ச் சத்து உள்ள உணவுகள் குறைவான கலோரிகள் உடையது. எனவே உடல் எடை குறைப்பதற்கு ஒன்று குறைவான கலோரிகளை உட்கொள்ள வேண்டும் அல்லது அதிக கலோரிகளை குறைக்கச் செய்ய வேண்டும். உணவின் ஒரு பகுதியில் கலோரி குறைவாக உள்ள உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக நீர்சத்து உள்ளதால் வெள்ளரி ஜூஸ் சிறந்த உணவாக அமையும். சிறிது லெமன் ஜூஸ் மற்றும் புதினா இலைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
4. நெல்லிக்காய் ஜூஸ்:
ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸுடன் நாளை தொடங்குவது உங்களுடைய ஜீரண அமைப்பை நாள் முழுவதும் சீராக வைத்திருக்க உதவும். மேலும் அதிக கொழுப்பை கரைக்க பயன்படும். சீரான உடல் எடையை தக்க வைக்க வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் பருகுவது சிறந்தது. சிறிதளவும் தேனையும் சேர்த்துகொண்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
5. மாதுளை ஜூஸ்:
மாதுளை ஜூஸ், தோலில் இயற்கையான பொலிவை பெறுவதற்கு உதவுவதோடு, உடல் எடை குறைப்பதற்கும் பயன்படும். டெல்லியைச் சேர்ந்த உடல் எடை மேலாண்மை நிபுணர் டாக்டர், கார்கி ஷர்மா கூறுவதாவது “மாதுளையில் ஆன்டி ஆக்சிடன்ட்கள், பாலிபினால்கள் மற்றும் லினோலெனிக் அமிலம் ஆகியவவை நிறைந்துள்ளன - இவை அனைத்தும் கொழுப்பை குறைக்க உதவுவதோடு, உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன. மாதுளை ஜூஸ் உங்கள் பசியை குறைக்க உதவுகிறது.
6. முட்டைக்கோஸ் ஜூஸ்:
முட்டைக்கோஸ் ஜூஸ் ஜீரனக்கோளாறு உள்ளிட்ட வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இவை உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. நிறைய நார்ச்சத்துகளை உட்கொள்வது கொழுப்பை குறைக்க உதவுவதாக பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. “அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளை உட்கொள்வது உடலில் உள்ள நீரை உறிஞ்சி செரிமானத்தின் போது ஜெல் போன்ற திரவத்தை உருவாக்குகிறது. இது பசியை குறைக்க நீண்ட நேரம் உதவுகிறது.” என்கிறார் உடல் எடை மேலாண்மை நிபுணர் டாக்டர், கார்கி ஷர்மா, முட்டைக்கோஸை லெமன், கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகளுடன் பயன்படுத்தலாம்.
7. தர்பூசணி ஜூஸ்:
தர்பூசணி ஜூஸ் ஒவ்வொரு 100 கிராமிற்கும் 30 கலோரிகளை மட்டுமே தந்து உடலில் நீர் இருக்கச் செய்கிறது. “இது அமிலோ ஆசிட் ஆர்கினைனால் நிறைந்து கொழுப்பை குறைக்க உதவுகிறது” என்கிறார் டாக்டர் கார்கி ஷர்மா.
8. ஆரஞ்சு ஜூஸ்:
மற்ற பாணங்களைவிடவும் ஆரஞ்சு ஜூஸில் கலோரிகள் குறைவாகவே உள்ளது. இதில் நாம் உட்கொள்ள வேண்டிய அளவை விடவும் குறைவான கலோரிகளே உள்ளன.
9. அன்னாசி ஜூஸ்:
வயிற்று கொழுப்புக்கு அன்னாசி பழம் சிறந்த மருந்தாக நம்பப்படுகிறது. அதில் உள்ள ப்ரோமெலைன் என்கிற திரவம் வயிற்றில் உள்ள கூடுதல் கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும் இந்த ப்ரோமெலைன் மற்ற திரவங்களுடன் சேர்ந்து கொழுப்பை ஜீரணிக்கவும், பசியை குறைகக்வும் செய்கிறது. ஆரஞ்சைப் போலவே இதிலும் உட்கொள்ள வேண்டிய அளவைவிடவும் குறைவான கலோரிகளே உள்ளன.
10. சுரைக்காய் ஜூஸ்:
COMMENTSசுரைக்காய் ஜூஸ் எடை குறைப்பதற்கு சிறந்த உணவு. ஆஷா தோரட் அவர்கள் தன்னுடைய ’25 Fat Burning Juice Recipes’ புத்தகத்தில் சுரைக்காய் கொழுப்பை குறைப்பதற்கு ஆயுர்வேதத்தில் சிறந்த மருந்தாக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சுரைக்காய் ஜீஸ் கொழுப்பே இல்லாமல் குறைவான கலோரிகள் உடன் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
No comments