குழந்தைகளுக்கு இரும்பு சத்து குறைவாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகளுக்கு இரும்பு சத்து குறைவாக இருந்தால் என்ன செய்யணும்?
பெரும்பாலான குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. இந்த இரும்புச் சத்து குறைப்பாட்டால் நிறைய குழந்தைகள் இரத்த சோகை நோய்களால் பாதிப்படைகின்றனர். எனவே குழந்தைகளுக்கு இரும்புச் உணவுகளை பரிந்துரைக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குழந்தைகள் எதையும் சரியாக சாப்பிட மாட்டார்கள். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை அளிப்பது என்பது கடினமான விஷயம். குழந்தைகளை சாப்பிட வைப்பதற்குள் அம்மாமார்களுக்கு போதும் போதும் என்றாகி விடும். இதனாலேயே நிறைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் இரும்புச் சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர். ஆனால் வளரும் குழந்தைக்கு இரும்புச் சத்து என்பது மிகவும் அவசியம். ஏனெனில் இரும்புச் சத்து குறைபாடு உங்க குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் பாதிக்க கூடியது. இரும்புச் சத்து அன்றாட தேவைகளுக்கு ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல் இது குழந்தையின் மூளை வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இரும்புச் சத்து குறைபாடு இரத்த சோகை நோய்க்கு வழிவகுக்கும். எனவே குழந்தைகளுக்கு ஏற்படும் இரும்புச் சத்து குறைப்பாட்டை எப்படி போக்கலாம் என்பதற்கான வழிகள். இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இரும்புச் சத்து குறைப்பாட்டை தவிர்க்க முடியும்.
காரணங்கள்
இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்
மோசமான உணவு
இரத்த இழப்பு
உணவுகளில் இருந்து இரும்பை உறிஞ்ச முடியாத தன்மை
போன்றவை இரும்புச் சத்து குறைப்பாட்டின் காரணமாக ஏற்படுகின்றன.
இரும்புச் சத்தின் முக்கியத்துவம்
இரும்புச் சத்து தான் நுரையீரலில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை இயக்க உதவுகிறது. தசைகள் செயல்பட ஆக்ஸிஜன் அவசியம். இரும்புச் சத்து குறைபாடு குழந்தையின் வளர்ச்சி மற்றும் நடத்தை சிக்கலை உண்டாக்கும். இது இரத்த சோகை நோய்க்கு வழிவகுக்கும். இரத்தத்தில் போதுமான சிவப்பணுக்கள் இல்லை என்றால் அது தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். இதனால் குழந்தையின் ஹூமோகுளோபின் அளவு குறைவாக இருக்கலாம். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு வெளியில் இருந்து இரும்புச் சத்து உட் செலுத்துதல் அல்லது நரம்பு இரும்பு சிகிச்சை மூலம் இரத்த மாற்றம் அல்லது சிகிச்சைகள் தேவைப்படலாம். இந்த சிகச்சைகள் செய்ய மருத்துவமனை உதவி தேவை.
இரும்புச் சத்து குறைப்பாட்டின் அறிகுறிகள்
குழந்தைகளின் தோல் வெளிரிய நிறத்தில் காணப்படும்.
கைகள் மற்றும் கால்கள் குளிர்ந்த நிலையில் இருக்கும்
பசியின்மை மற்றும் ஐஸ்கட்டி, அழுக்கு, பெயிண்ட் அல்லது ஸ்டார்ச் போன்ற பொருட்களை எடுத்து சாப்பிட வேண்டும் என்பது போல் தோன்றும்.
குழந்தைகளின் வளர்ச்சி மெதுவாக இருக்கும்
விரைவான சுவாசம், நடத்தை பிரச்சனைகள் மற்றும் அடிக்கடி தொற்றுநோய்களின் அறிகுறிகளை வெளிப்படுத்தக் கூடும்.
உடையக்கூடிய நகங்கள், நாக்கில் ஆழமான சிவப்பு தென்படுதல், வாயின் ஓரங்களில் விரிசல்கள் போன்றவை இரும்புச் சத்து குறைப்பாட்டை உண்டாக்கும்.
தடுப்பு முறைகள்
குழந்தைகளின் இரும்புச்சத்து குறைப்பாட்டை போக்க ஆரம்பத்தில் இருந்தே குழந்தைகளின் உணவில் இரும்புச் அடங்கிய உணவுகளை சேர்க்க வேண்டும்.
தற்போது இரும்புச் சத்து மாத்திரைகள் கூட கிடைக்கின்றன. ஆனால் நீங்கள் உங்க குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நபராக இருந்தால் இரும்புச் சத்து மாத்திரைகளை எடுப்பதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.
குழந்தையின் 4 மாத வளர்ச்சிக்கு பிறகு இரும்புச் சத்து டானிக் அல்லது மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதே மாதிரி தினமும் இரும்புச் சத்து அடங்கிய உணவுகளையும் எடுத்துக் கொள்வது அவசியம்.
குழந்தை பால் குடிப்பதை நிறுத்திய உடன் இரும்புச் சத்து அடங்கிய தானியங்கள், ஒரு நாளைக்கு ஒரு முறை சுத்தமான இறைச்சி, பீன்ஸ் போன்ற இரும்புச் சத்து அடங்கிய உணவுகளை கொடுங்கள்.
குழந்தைக்கு வயதாகி இருந்தால் சிவப்பு இறைச்சி, சிக்கன், மீன், பீன்ஸ், கீரைகள் போன்ற உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு சுமார் 700 மில்லி லிட்டர்களுக்கு பாலை கட்டுப்படுத்துங்கள். உங்கள் குழந்தையின் உணவில் வைட்டமின் சி சேர்க்கவும். ஏனெனில் விட்டமின் சி தான் உணவில் இருந்து இரும்புச் சத்தை உறிஞ்ச உதவுகிறது. சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, பெல் மிளகு, தக்காளி மற்றும் இலை கீரைகள் போன்ற உணவுகளை தேர்ந்தெடுத்து கொடுங்கள்.
இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகள்
குழந்தைகளின் இரும்புச் சத்து குறைப்பாட்டை போக்க மெலிந்த இறைச்சி, டுனா போன்ற கடல் உணவுகள், பீன்ஸ் மற்றும் தோல்கள் கொண்ட உருளைக்கிழங்கு ஆகியவை இரும்புச் சத்து ஊட்டச்சத்தின் நல்ல ஆதாரங்கள் ஆகும். கீரைகள், ப்ரோக்கோலி மற்றும் திராட்சை போன்ற உலர்ந்த பழங்கள் இரும்புச் சத்து நிறைந்தவை. ப்ரூனே ஜூஸ் என்பது உங்க குழந்தையின் உணவில் சேர்க்க வேண்டிய மற்றொரு உணவாகும், ஏனெனில் இதில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
No comments