கோரோனோவை போல பூமியில் வாழும் 5 வைரஸ்கள்
கோரோனோவை போல பூமியில் வாழும் 5 வைரஸ்கள் ...
உலகில் பல லட்சக்கணக்கான வைரஸ்கள் காணப்படுகிறது. இதில் ஒரு சில வைரஸ்களால் மனிதனின் உயிருக்கே ஆபத்தாக கூடிய சூழல் உள்ளது. அந்த வகை வைரஸ்கள் எவை என அறிந்து கொள்வோம்.
கொரோனா வைரஸின் தாக்கம் டிசம்பர் 2019 ல் தொடங்கி தற்போது வரை பல்லாயிரக்கணக்கான உயிர்களை குடித்து வருகிறது. இந்த நாவல் கொரோனா வைரஸ் மட்டும் தான் கொடிய வைரஸா என்றால் இல்லை. இது போன்று இன்னும் பல ஆபத்தான வைரஸ்கள் காணப்படுகின்றன. அவையும் மனிதனை தாக்கி டெங்கு, சுவாசக் கோளாறுகள், கடுமையான காய்ச்சல், உயிரிழப்பு போன்ற பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது.
வைரஸ் என்பது முகச்சிறிய உயிரினம். இதன் அளவு நானோ மீட்டரில் தான் இருக்கும். இதை நீங்கள் ஒரு எலக்ட்ரானிக் மைக்ரோஸ்கோப் வழியாகவே பார்க்க முடியும். இதனுள் ஒரு இன்ட்ரா செல்லூர் ஆர்கான் (ஆர்என்ஏ இழை) காணப்படும். இதனால் இது நம் உடலில் உள்ள செல்களுக்குள் நுழைந்து வளரவும் பெருகவும் முடியும்.
இந்த கொரோனா வைரஸைப் போல் பூமியில் உள்ள உயிர்களை தாக்கும் இன்னும் கொடிய வைரஸ்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.
கொரோனா
சீனாவின் வுஹான் நகரில் தொடங்கிய நாவல் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, இதுவரை 33,000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றுள்ளது. கோவிட் 19 தொற்றுக்கு முன்னர் இன்னும் இரண்டு தொற்றுக்கள் ஏற்பட்டது. அவை மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (MERS-CoV) மற்றும் கடுமையான சுவாச நோய்க்குறி (SARS-Cov) ஆகியவை ஆகும். இந்த வைரஸ்களும் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். இந்த கொரோனா வைரஸ்கள் ஜூனோடிக் ஆகும். அதாவது இது விலங்குகளிடமிருந்து மக்களுக்கு பரவியது. SARS மற்றும் MERS ஒப்பீட்டளவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டிருந்தாலும் ஆனால் இந்த நோய்களின் பரவல் சில பகுதிகளில் மட்டுமே உள்ளூர்மயமாக்கப்பட்டது. இருப்பினும், விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் பல வைரஸ்கள் பரவி உள்ளன. அந்தவகையில் கோவிட் 19 ஒரு கொடூரமான வைரஸாக பரவி வருகிறது. இதனால் ஏகப்பட்ட மக்கள் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
எபோலா வைரஸ்
எபோலா வைரஸ் 1976 இல் சூடான் குடியரசு மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசில் எபோலா வைரஸ் வெடிப்பு ஒரே நேரத்தில் தொடங்கியது.இந்த வைரஸ் காட்டு விலங்குகளிடமிருந்து பரவுகிறது. இரத்தம் அல்லது பிற உடல் திரவங்களுடனான நேரடி தொடர்பு அல்லது பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது விலங்குகளிடமிருந்து வரும் திசுக்களால் மனிதனுக்கு மனிதன் பரவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸின் தாக்கத்தால் மனிதனுக்கு காய்ச்சல், தலைவலி, பலகீனம், மூட்டு மற்றும் தசை வலி, வயிற்று போக்கு, வாந்தி, வயிற்று வலி, பசியின்மை போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது.
இந்த நோய் பின்பு கண்கள், காதுகள் மற்றும் மூக்கின் வழியாக இரத்தக் கசிவை ஏற்படுத்துகிறது.
ஹெச்ஐவி 2
எச். ஐ.வி வைரஸ் அனைவருக்கும் ஆபத்தான வைரஸ் என்று கூறப்படுகிறது. இந்த வைரஸ் நோய் முதன்முதலில் 1980 களின் முற்பகுதியில் கண்டறிப்பட்டது. அப்போதிருந்து இந்த வைரஸ் காரணமாக 32 மில்லியன் மக்கள் இறந்து விட்டனர். இந்த வைரஸையும் அழி்பதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்த வைரஸ் தொற்றன் தீவிரத்தைக் குறைக்கக் கூடிய, கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் இருக்கின்றன.
இன்புளுயன்சா வைரஸ் 2
இன்புளுயன்சா புளூ காய்ச்சலை உண்டாக்கக் கூடிய வைரஸ் ஆகும். சில நேரங்களில் ஸ்பானிஷ் காய்ச்சல் என்று அழைக்கப்படும் மிகவும் கொடிய காய்ச்சல் தொற்று 1918 இல் தொடங்கியது. இது உலக மக்கள் தொகையில் 40% வரை தொற்றிக் கொண்டது. பிறகு 50 மில்லியன் மக்களைக் கொன்றுள்ளது.
ஹண்டா வைரஸ்
பாதிக்கப்பட்ட எலிகளின் நீர்த்துளிகள், சிறுநீர் மற்றும் மலம் வழியாக இந்த வைரஸ் பரவுகிறது. எனவே எலிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் இருந்து மக்கள் நோயைக் பெறுவதை கட்டுப்படுத்துகிறார்கள். ஹன்டவைரஸ் நுரையீரல் நோய்க்குறி (எச்.பி.எஸ்) என்பது கடுமையான அல்லது சில நேரங்களில் ஆபத்தான, நுரையீரல் தொற்று ஆகும். இது காய்ச்சல், சோர்வு, தலைவலி, தலைச்சுற்றல், சளி, வயிற்று பிரச்சனைகள் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது.
டெங்கு வைரஸ்
டெங்கு காய்ச்சல் என்பது கொசுவால் பரவக் கூடிய வைரஸ் தொற்று ஆகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, டெங்கு ஆண்டுக்கு 50 முதல் 100 மில்லியன் மக்களை நோய்வாய்ப்படுத்துகிறது என்று கூறுகின்றது. இந்த டெங்கு காய்ச்சலில் டென் 1, டென் 2 மற்றும் 3&4 என நான்கு வகைகள் உள்ளன. காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல் வலி, வாந்தி, கண்ணுக்கு பின்புற வலி, எலும்பு வலி போன்றவை டெங்கு காய்ச்சலின் அறிகுறியாக உள்ளது
No comments