Main Menu Style

Breaking News

வைட்டமின் -சி உணவுகள் போதுமா? - இனி கொரோனாவினை எதிர்கொள்ள...

வைட்டமின் -சி உணவுகள் போதுமா?  - இனி  கொரோனாவினை எதிர்கொள்ள...

உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி கொரோனா வைரஸ் 118 நாடுகளைத் தாக்கியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, சோப் போட்டு கைகளைக் கழுவுதல், இருமல், தும்மலின்போது வாயை மூடுதல், அருகில் இருப்பவர்களிடமிருந்து குறிப்பிட்ட தூரம் விலகியிருத்தல் ஆகியவற்றைப் பின்பற்றலாம். ஆனால், கொரோனா வைரஸ் தாக்கத்தைவிட நமக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள்த

அதுபோன்ற ஒரு வதந்திதான், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள வைட்டமின் சி அதிகம் உள்ள பொருள்களைச் சாப்பிட வேண்டும் என்பது. இந்த வதந்தியை நம்பி பலரும் வைட்டமின் சி செறிந்துள்ள பொருள்களை அதிக அளவில் வாங்கியும் சாப்பிட்டும் வருகின்றனர். குறிப்பாக, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைப் பழங்களை வழக்கத்தைவிட அதிகமாகச் சாப்பிட்டு வருகின்றனர்.

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்கள் சளியைக் கட்டுப்படுத்துபவை எனக் கருத்தப்பட்டாலும், கொரோனா பாதிப்பால் ஏற்படும் இருமல் மற்றும் சளியைத் தடுக்கக் கைகொடுக்குமா என்பது, ஆராய்ந்து பார்க்க வேண்டிய கேள்வி.


"வைட்டமின் சி என்பது அஸ்கார்பிக் அமிலம் என்று அழைக்கப்படும், தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின் வகை. இங்கிலாந்து நாட்டின் சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, வைட்டமின் சி நமது உடலில் நரம்பிய ஒருங்கமைவு கடத்திகளாகவும், புரதம், கொழுப்பு, ஃபோலிக் அமிலம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் இணைப்புத் திசுக்களின் செயல்பாடுகளுக்கு முக்கியமான பொருளாகவும் இருக்கிறது.


வைட்டமின் சி-யில் செறிந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது உடலை கதிர்வீச்சுத் தாக்கத்திலிருந்து காத்து, ஒவ்வாமையின் தீவிரத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்களை எதிர்த்துப் போராடி நம்மைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. என்றாலும், 2013-ம் ஆண்டு கோக்ரேன் சிஸ்டமேட்டிக் ரிவ்யூவில் வெளியிடப்பட்ட ஆய்வுகள் உட்பட சமீபத்திய ஆய்வுகள்வரை, வைட்டமின் சி சத்து ஜலதோஷத்தைக் குணப்படுத்தாது, எனினும் அதன் அறிகுறிகளை ஓரளவுக்குத் தணிக்கும் எனக் கூறுகின்றன.

வைட்டமின் சி உணவுகள்

இந்த ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், வைட்டமின் சி கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தாக இருக்காது என்பதுதான் இதற்கான பதில். பொதுவாக, 90 முதல் 180 மி.கி அளவுக்கு வைட்டமின் சி-யை நாம் உட்கொள்ளும்போது, 70 முதல் 90 சதவிகிதம்வரை நமது உடலால் உறிஞ்சப்பட்டுவிடும். இந்த அளவில் எடுத்துக்கொள்ளும்போது அது நமது உடலுக்கு நன்மை அளிக்கும். உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு சிறப்பாகச் செயல்படுவதற்கும், ஸ்கர்வி நோய் வராமலும் தடுக்கும்.ஆனால், அளவுக்கு அதிகமாக வைட்டமின் சி-யை எடுத்துக்கொள்ளும்போது அது முற்றிலும் பயனற்றதாகிவிடுகிறது. ஏனென்றால், நமது உடல் இயற்கையாகவே தனக்குத் தேவையில்லாத சத்தை வெளியேற்றும் தன்மை கொண்டது. மேலும், அதிக அளவு வைட்டமின் சி-யை எடுத்துக்கொள்ளும்போது வயிற்றுப் போக்கு, சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் குமட்டலை ஏற்படுத்தும்.

சிறுநீரகம்


எனவே, கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்கிறேன் என்ற பெயரில், மற்ற பிரச்னைகளை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருக்க வேண்டும். மேலும், நோய் எதிர்ப்புத் திறனை தூண்டும் வைட்டமின் டி-யை, அன்றாடம் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பதன் மூலம் நாம் பெற்றுக்கொள்ளலாம்.


மேலும், நாம் எடுத்துக்கொள்ளும் வைட்டமின் சி-யை மட்டும் சார்ந்து நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு இல்லை என்பதை நினைவில் கொள்வது அவசியமாகிறது. நமது உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான சரிவிகித உணவை எடுத்துக்கொள்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
வைட்டமின் சி உணவுகள்


இந்நிலையில், நமது உடலின் நோய் எதிர்ப்புத் திறனை உயர்த்துவது நம்மை எந்த நிலையிலும் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்காது. கோவிட்-19 என்பது கொரோனா வைரஸின் ஒரு புதிய திரிபு. இதை எதிர்த்துப் போராடுவதற்கு நமது உடலில் எந்த வகையான ஆன்டிபயாடிக்களும் இல்லை என்பதால் கொரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்குவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். சுகாதார நடைமுறைகள் மற்றும் சோஷியல் டிஸ்டன்சிங்... இவைதான் இக்கணத்தின் தேவை."No comments