Main Menu Style

Breaking News

Sanitizer பயன்படுத்தும் போது நாம் செய்யும் தவறுகள்

Sanitizer பயன்படுத்தும் போது நாம் செய்யும் தவறுகள் ...

தற்போது கைகளை கழுவுவது எல்லோரின் வாடிக்கையான செயல்களுள் ஒன்றாகி விட்டது. ஆனால் நிறைய பேர்கள் கைகளில் சானிட்டைசரை அப்ளே செய்யும் போது நிறைய தவறுகளை செய்கின்றனர். அவை எப்படி பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் சானிட்டைசரை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதையும் அளியுங்கள்.





எங்கு பார்த்தாலும் கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் மாஸ்க்களும், சானிட்டைசர் அப்ளே செய்வதும் நம் சுகாதார நடைமுறையில் முக்கிய அங்கம் ஆகி விட்டது. சானிட்டைசரை விட சோப்பால் கைகளை கழுவது சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் நம் அன்றாட நடவடிக்கைகளுக்கு மத்தியில் நாம் அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது என்பது கேள்விக்குரியது. இதனால் சானிட்டைசரை பயன்படுத்துவதை விட வேறு வழி இல்லை. கடந்த ஆறு மாதங்களில் சானிட்டைசரின் பயன்பாடு அதிகரித்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும் இதை எப்படி பயன்படுத்துவது என்று மக்களுக்கு தெரிவதில்லை.

கைகளில் சானிட்டைசரை அப்ளே செய்யும் போது செய்யக் கூடாத தவறுகள் என்னென்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
​ஆல்கஹாலுக்கு பதிலாக 




சானிட்டைசரில் ஆல்கஹாலுக்கு பதிலாக ட்ரைக்ளோசன் உள்ளது. பொதுவாக கொரோனா வைரஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிக்க ஆல்கஹால் உள்ள சானிட்டைசர்கள் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் ஆல்கஹால் இல்லாத சில சுத்திகரிப்பான்களில் ட்ரைக்ளோசன் உள்ளது. 


ட்ரைக்ளோசன் ஒரு சக்தி வாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு பொருள். இவை பெரும்பாலும் பூச்சிக்கொல்லிகளில் பயன்படுகிறது. இது சருமத்தால் எளிதில் உறிஞ்சப்படலாம், இது தைராய்டு செயல்பாட்டை பாதிக்கும் மற்றும் கல்லீரல் மற்றும் தசைகளின் செயல்பாட்டையும் பாதிக்கக் கூடியது. 
​சாப்பிடும் முன் 




சாப்பிடுவதற்கு முன்பு சானிட்டைசரை பயன்படுத்தாதீர்கள் 


சாப்பிடுவதற்கு முன்பு கைகளை சுத்தப்படுத்த சானிட்டைசரை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் சானிட்டைசரில் ஏராளமான கெமிக்கல்கள் உள்ளன. இதை அடிக்கடி உபயோகிப்பது நம் நோயெதிரிப்பு சக்திக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக குழந்தைகள் அடிக்கடி சானிட்டைசர் பயன்படுத்துவதை தவிருங்கள். 


குழந்தைகள் கைகளில் சானிட்டைசருடன் சாப்பிட்டால் அதிலுள்ள ஆல்கஹால் விஷயத்தை உண்டாக்கும். இது அவர்களின் நோயெதிரிப்பு சக்தியையையும் சேதப்படுத்தும். பலவீனமான நோயெதிரிப்பு சக்தி ஒருவரை நோய்களால் பாதிக்கக் கூடியதாக மாற்றுகிறது. 
​வாசனை மிகுந்த சானிட்டைசர்கள் வேண்டாம் 



சானிட்டைசர்கள் கூடுதல் வாசனையுடன் இருந்தால் அதில் இன்னும் கூடுதல் நச்சுக்களும் கெமிக்கல்களும் சேர்க்கப்படுகிறது. செயற்கை வாசனை நிலவினால் அதில் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் நிறைய உள்ளன. அவை எண்டோகிரைன் என்ற சீர்குலைப்பை ஏற்படுத்துகிறது. அவை மரபணு வளர்ச்சியை மாற்றக்கூடிய ஹார்மோன்களை பிரதிபலிக்கின்றன. 
​கடுமையான தீக்காயங்களை உண்டாக்குகிறது 




இதை பயன்படுத்தி விட்டு அடுப்பு வேளை மற்றும் நெருப்பிற்கு அருகில் வேலை செய்வது உங்களுக்கு கடுமையான தீக்காயங்களை ஏற்படுத்தும். மேலும் சானிட்டைசர்கள் உங்களுக்கு உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே சானிட்டைசரை பயன்படுத்தி விட்டு நெருப்பிற்கு அருகில் செல்ல வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இப்படி நிறைய சம்பவங்கள் நடந்து உள்ளன. காரில் உள்ள சானிட்டைசர் பாட்டிலை நன்றாக மூடி வையுங்கள். திறந்த நிலையில் இருக்கும் போது அது ஆவியாகி கார் பற்றிக் கொள்ள நிறைய வாய்ப்பு உள்ளது. 
​மாஸ்க்களை சானிட்டைசர் கொண்டு சுத்தப்படுத்த வேண்டாம் 



மாஸ்க்களை பயன்படுத்தும் போது அதில் சானிட்டைசர் கொண்டு சுத்தப்படுத்தாதீர்கள். நீங்கள் நீரில் கழுவினாலும் மாஸ்க் களில் சானிட்டைசர் தங்கி இருக்கலாம். இது நீராவியாகும் போது எளிதில் தீப்பற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இல்லையென்றால் சானிட்டைசர் மணம் குமட்டல் வாந்தி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. சானிட்டைசர் பக்க விளைவுகளில் இருந்து உங்களை பாதுகாப்பாக வைக்க சில வழிகள் 
​பாதுகாக்க சில வழிகள் 




சானிட்டைசரை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும் 


சானிட்டைசரை காற்று புகாத பாட்டில்களில் சேகரித்து வையுங்கள். 


சானிட்டைசரை உலர்ந்த மற்றும் குளிர்ந்த இடங்களில் வையுங்கள் 


சானிட்டைசரை சமையல் அறையில் வைக்க வேண்டும். சமைக்கும் முன்பு கைகளில் பயன்படுத்தக் கூடாது. 


சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு உங்க மாஸ்க்களை சுத்தம் செய்யுங்கள். ஒரு போதும் சானிட்டைசர் கொண்டு சுத்தம் செய்யாதீர்கள். 


சானிட்டைசர் நம் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்தாலும் அடிக்கடி சானிட்டைசர் பயன்படுத்துவதை தவிர்த்து சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கைகளை கழுவுங்கள். அது உங்களுக்கு பாதுகாப்பை வழங்கும். 



No comments